உடலில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் சிறுநீரகம் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்க சில பானங்களை எடுத்துக் கொள்ளலாம்
மாதுளை சாறு
மாதுளம்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக கற்களை அகற்றவும், சிறுநீரின் அமிலத்தன்மையைக் குறைத்து, சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதை உட்கொள்வது சிறுநீரகங்களில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது
ஆம்லா சாறு
இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு மிகவும் நல்லது. இது சிறுநீரகங்களில் உள்ள அதிகப்படியான கால்சியம் ஆக்சலேட்டை அகற்ற உதவுகிறது. எனவே சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்க ஆம்லாவைக் கொண்டு வீட்டிலேயே சாறு தயாரித்து உட்கொள்ளலாம்
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறில் உள்ள பீட்டேன் எனும் வேதி பொருள் மிகவும் பயனுள்ள பைட்டோ கெமிக்கல் ஆகும். இது ஆன்டி ஆக்சிடென்ட்கள் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது
கொத்தமல்லி டிடாக்ஸ்
சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்க, கொத்தமல்லி மிகவும் பயனுள்ள மூலிகைகளில் ஒன்றாகும். இது சிறுநீரகங்களில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும், சிறுநீரக கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது
ஆப்பிள் சைடர் வினிகர்
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிட்ரிக் அமிலமானது சிறுநீரக கற்களை கரைத்து, நச்சுகளை வெளியேற்றுகிறது. எனவே இது சிறந்த நச்சுநீக்கி பானமாக அமைகிறது. இதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்கலாம்
எலுமிச்சை நீர்
எலுமிச்சை சிட்ரிக் அமிலம் நிறைந்ததாகும். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் வழிவகுக்கிறது
தேங்காய் தண்ணீர்
இதில் உள்ள அதிகளவிலான எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு நீரேற்றத்தைத் தருகிறது. எனவே இது சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை நீக்கி இயற்கையாகவே சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது