குளிர்காலத்தில் பச்சை பட்டாணி தரும் ஆரோக்கிய நன்மைகள்

By Gowthami Subramani
16 Dec 2024, 18:00 IST

பச்சைப் பட்டாணியில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குளிர்காலத்தில் பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்

எடையிழப்புக்கு

பச்சை பட்டாணியில் குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. ஆனால், அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. குளிர்காலத்தில் எடையைக் குறைக்க இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

பச்சைப் பட்டாணியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் இயக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடுகள் உள்ளது. எனவே இது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

பச்சைப் பட்டாணியில் நிறைந்துள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

இதில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியை தருகிறது

எப்படி சாப்பிடலாம்?

குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை சில மசாலா பொருள்களுடன் சேர்த்து சூப் தயார் செய்து அருந்தலாம் அல்லது பச்சை பட்டாணி குழம்பு வடிவில் தயார் செய்யலாம்