தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு தொடர்பான பிரச்சனையைக் குறைக்க அருகம்புல் சாறு பெரிதும் உதவுகிறது. இதில் அருகம்புல் சாறு தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
நரம்பு தளர்ச்சி குணமாக
தினமும் காலை நேரத்தில் காய்ச்சாத ஆட்டு பாலில் அருகம்புல் சாறை கலந்து பயன்படுத்துவது நரம்பு தளர்ச்சி பிரச்சனையைக் குணப்படுத்த உதவுகிறது
அல்சர் குணமாக
அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளால் வயிறு புண்ணாகி அல்சர் பிரச்சனை ஏற்படலாம். தினமும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதன் மூலம் வயிற்றுப்புண், வாய்ப்புண் பிரச்சனையைக் குணமாக்கலாம்
நீரிழிவு பிரச்சனை குணமாக
அருகம்புல்லில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இவை கை, கால் நடுக்கம், பாதங்களில் எரிச்சல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது
உடல் உஷ்ணம் நீங்க
அருகம்புல் குளிர்ச்சித் தன்மை கொண்டதாகும். உடல் உஷ்ணம் நீங்க தினமும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை அருந்தலாம். இவை உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது
பித்தம் பிரச்சனை நீங்க
உடலில் பித்தத்தின் அளவை சரி செய்ய அருகம்புல் சாறு உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்கள் அருகம்புல் சாற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை இரத்த ஓட்டம் தடையின்றி சீராக வைக்க உதவுகிறது
மலச்சிக்கல் நீங்க
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை அருந்துவது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருகிறது