முடி ஸ்ட்ராங்கா, நீளமா வளர இந்த கருப்பு விதைகளை யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
25 Nov 2024, 18:31 IST

சில கருப்பு விதைகள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதில் முடி நீளமாகவும், வலுவாகவும் வளர உதவும் கருப்பு விதைகள் சிலவற்றைக் காணலாம்

கருஞ்சீரக விதைகள்

இந்த விதைகள் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது. மேலும், இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக முடி மீண்டும் வளர்வதை ஊக்குவிக்கிறது

கருப்பு எள் விதைகள்

இதில் இரும்பு, மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கருப்பு எள் விதைகள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது

அஜ்வைன்

இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இந்த விதைகள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் முடி மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது

சியா விதைகள்

சியா விதைகளில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலை மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது உடலின் ஒட்டுமொத்த வலியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது

கருப்பு கடுகு விதைகள்

இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த விதைகள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மற்றும் முடி உதிர்வதைக் குறைக்க உதவுகிறது