இந்த 7 உணவுகளைச் சாப்பிட்டால் கொத்து, கொத்தா முடி கொட்டும்!
By Kanimozhi Pannerselvam
30 Oct 2024, 09:07 IST
சத்தான உணவு நீண்ட, ஆழமான, ஆரோக்கியமான முடியை வழங்குகிறது. திடீரென முடி உதிர ஆரம்பித்தால் அதற்குக் காரணம் நீங்கள் உண்ணும் உணவில் சில சத்துக்கள் இல்லாததே. சில உணவுகள் கடுமையான முடி உதிர்வை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஏழு உணவுகள் இதோ...
சர்க்கரை
இன்சுலின் எதிர்ப்பானது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் வழுக்கை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் ஏற்கனவே முடி உதிர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் சர்க்கரைக்கு நிரந்தரமாக குட்பை சொல்லுங்கள்
அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள் முடி உதிர்வுக்கு காரணம். சுத்திகரிக்கப்பட்ட மாவு, ரொட்டி, சர்க்கரை போன்றவை மிக அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டவை, ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும், இன்சுலின் அளவை கணிசமாக அதிகரிப்பதோடு, முடி உதிர்வை ஏற்படுத்தும்.
ஆல்கஹால்
முடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. ஆனால் ஆல்கஹால் புரதங்களை பலவீனப்படுத்துகிறது, இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும்.
டயட் சோடா
செயற்கை இனிப்பு அஸ்பார்டேம் மூலம் தயாரிக்கப்படும் டயட் சோடா முடியை பலவீனப்படுத்துகிறது. இது உச்சந்தலையை வலுவிழக்கச் செய்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.
ஜங்க் ஃபுட்
நொறுக்குத் தீனிகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எண்ணெய் உணவுகளை தினமும் உட்கொள்வதும் முடி உதிர்வை ஏற்படுத்தும்
பச்சை முட்டையின் வெள்ளைக்கரு
இதில் உள்ள புரதம் கூந்தலுக்கு மிகவும் நல்லது. ஆனால் சமைக்காத முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்வது பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். வைட்டமின் பயோட்டின் கெரட்டின் உற்பத்திக்கு உதவுகிறது. முடியின் சத்துக்களை குறைத்து முடி உதிர்வை அதிகரிக்கிறது
மீன்
மீனில் உள்ள அதிக அளவு பாதரசம் முடி உதிர்வை ஏற்படுத்தும். காலநிலையில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் மீனில் மெத்தில்மெர்குரி இருப்பு வியத்தகு அளவில் அதிகரித்து வருகிறது.