முடி பராமரிப்புக்கான இயற்கை வைத்தியங்களின் பட்டியலில் கிராம்பு எண்ணெய் முக்கிய இடம் பெறுகிறது. இதில் முடி ஆரோக்கியத்திற்கு கிராம்பு எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க
கிராம்பு எண்ணெயில் யூஜெனால் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதுடன், வலுவான நீண்ட முடிக்கு வழிவகுக்கிறது
பொடுகு நீங்க
கிராம்பு எண்ணெயில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை உச்சந்தலையில் அரிப்பு மற்றும் தொடர்ச்சியான பொடுகு போன்றவற்றைக் குறைக்கிறது
வேர்களை பலப்படுத்த
கிராம்பு எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடியின் வலிமையை பராமரிக்க உதவுகிறது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது முடியின் வேர்களை பலப்படுத்துகிறது
இயற்கையான முடி நிறத்திற்கு
அதிகரித்த மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் முன்கூட்டியே முடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜெனால் உதவுகிறது. இவை இயற்கையான முடி நிறத்தை மேம்படுத்துகிறது
கூந்தல் பளபளப்பிற்கு
தலைமுடிக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவது அதன் பிரகாசத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இதன் இயற்கை சேர்மங்கள் முடி அமைப்பை மேம்படுத்தி, ஒளிரும் மற்றும் பளபளப்பான தோற்றத்தை உருவாக்குகிறது