மலாசீசியா என்பது பொடுகை உண்டாக்கும் பூஞ்சையாகும் . இது இயற்கையாகவே தோலில் உள்ளது மற்றும் நோய்த்தொற்றைத் தடுக்க மற்ற நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் அதிகப்படியான உற்பத்தி தலையில் பொடுகை உருவாக்குகிறது.
வறண்ட பொடுகு
தலைமுடியில் பொடுகு ஏற்படுவதற்கு தோல் வறட்சியே முக்கிய காரணம் . வறண்ட மற்றும் குளிர் கால பருவநிலையில் இந்த வகை பொடுகு உருவாகிறது. உச்சந்தலையில் வெந்நீரை பயன்படுத்துவதாலும் சரும செல்கள் வறண்டு பொடுகு உருவாகலாம்.
மயிர்க்கால்கள் மூலம் செபம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், இறந்த சரும செல்கள் உச்சந்தலையில் உருவாகின்றன. இதனால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படும்.
நோயால் உருவாகும் பொடுகு
செபோசோரியாசிஸ், சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சரும நோய்களும் தலையில் பொடுகு ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் கடுமையான அரிப்பு, தலை சருமம் சிவந்து போதல், செதில் திட்டுகள் மற்றும் உச்சந்தலையில் வீக்கம் ஏற்படும்.
பொடுகை கட்டுப்படுத்துவது எப்படி?
சிகையலங்காரப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது, வெந்நீரைத் தவிர்ப்பது மற்றும் மென்மையான பொடுகு எதிர்ப்பு ஷாம்புகளை பயன்படுத்துவதன் மூலம் பொடுகுக்கு சிகிச்சையளிக்கலாம் அல்லது தடுக்கலாம்.