முடி நீளமாக வளர ஆளி விதையை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Ishvarya Gurumurthy G
11 Jan 2024, 23:26 IST

முடி வளர்ச்சிக்கு ஆளி விதை சிறந்த பங்கு வகிக்கிறது. இதனை முடி பராமரிப்பில் எப்படி இணைக்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

முடிக்கு ஆளி விதையின் நன்மை

ஆளி விதைகள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இது முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. ஆளி விதைகளை கூந்தலில் தடவுவது அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

தேங்காய் எண்ணெய்

ஆளி விதை தூளுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்யவும். இதில் வைட்டமின் பி, ஈ மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், முடிக்கு ஊட்டமளிக்கிறது. இது உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.

ஹேர் ஜெல்

ஆளி விதை ஹேர் ஜெல்லையும் உங்கள் தலைமுடிக்கு தடவலாம். இந்த ஜெல்லில் பாதாம் எண்ணெயை கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரில் முடியை அலசவும்.

ஆளி விதை எண்ணெய்

ஆளி விதை எண்ணெயைக் கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யலாம். இது உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இந்த எண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக தலைமுடியில் தடவவும்.

தயிர்

ஆளி விதை பொடியை தயிருடன் கலந்து, ஹேர் மாஸ்க் போன்று தலைமுடியில் தடவவும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி வேர்களில் இருந்து வலுவடையும். மேலும், இது கூந்தலுக்கு பளபளப்பையும் தருகிறது. 15 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் அலசவும்.

வெங்காய எண்ணெய்

வெங்காய எண்ணெயில் ஆளி விதை தூளை கலந்து தலைமுடியில் தடவலாம். இது உங்கள் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்றி, அவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.