நரை முடியை கருப்பாக்க உதவும் சூப்பர் ஹேர் ஆயில்

By Gowthami Subramani
02 Sep 2024, 09:39 IST

ஆரோக்கியமான, கருமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். இது முதுமையின் முக்கிய அறிகுறியான நரை முடியை சமாளிக்க வீட்டிலேயே தயாரித்த சில முடி எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்

கறிவேப்பிலை எண்ணெய்

தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து தயார் செய்யப்படும் இந்த எண்ணெய் கருமையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் பி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது தலைமுடியை இயற்கையான நிறத்திற்கு மாற்றுகிறது

செம்பருத்தி எண்ணெய்

செம்பருத்தி இலைகளைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது நரைமுடி ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இது முடியை வலுப்படுத்துவதுடன் உடைப்புகளைக் குறைக்கிறது

ஆம்லா எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆம்லா பொடி கொண்டு தயாரிக்கும் ஆம்லா எண்ணெய் முன்கூட்டிய நரைமுடியை கருமையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கெரட்டின் இழப்பைத் தடுத்து, இழைகளை வலுப்படுத்துகிறது

பிரிங்கராஜ் எண்ணெய்

தேங்காய் எண்ணெயுடன் பிரிங்கராஜ் பவுடரை இணைத்து தயாரிக்கும் எண்ணெய் முன்கூட்டிய நரைமுடியைத் தடுப்பதுடன், முடியை ஈரப்பதமாக்கி ஊட்டமளிப்பதாக அமைகிறது

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் முன்கூட்டிய நரைமுடியைத் தடுப்பதுடன், முடியைக் கருப்பாக மாற்றுகிறது

ஆலிவ் எண்ணெய்

நைஜெல்லா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் கருப்பு விதை எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பது முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கிறது. இது முடி உதிர்வைக் குறைத்து இழைகளை வலுப்படுத்த உதவுகிறது