ஆரோக்கியமான சருமத்திற்கு சில மூலிகைகள் மற்றும் பூக்களைப் பயன்படுத்தலாம். இதில் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் மூலிகைகள் மற்றும் பூக்களைக் காணலாம்
லாவெண்டர்
லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்துவது தோல் சிராய்ப்புகளை விரைவாகக் குணப்படுத்துகிறது. மேலும் இது ஆண்டிமைக்ரோபியல் பெப்டைட்களால் நிரப்பப்படுகிறது. இது சருமத்தை நேரடியாக தாக்கும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது
ரோஸ்மேரி
சரும சுத்தப்படுத்திகள், லோஷன்கள், மற்றும் முடி தயாரிப்புகளில் ரோஸ்மேரி பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோஸ்மேரி எண்ணெய் சரும செல்களை துடிப்பான வைக்கவும், வயதான எதிர்ப்பு நன்மைகளுடன் வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது
கெமோமில்
தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் கெமோமில் சேர்த்து பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக வைப்பதுடன், கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
காலெண்டுலா
இது பல லோஷன்கள் மற்றும் முடி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை சேர்க்கவும், சருமத்தை ஆழமாக நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது
கற்றாழை
இது மிகவும் பொதுவான மூலிகைகளில் ஒன்றாகும். இது வளர எளிதானதாகும். இது ஒரு பயனுள்ள ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. சருமம், முடி ஆரோக்கியம் இரண்டிலும் முக்கிய பகங்கு வகிக்கிறது
புதினா
புதினாவில் உள்ள கூறுகள் சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது கூந்தலுக்கு நன்மை அளிப்பதுடன், குளிர்ச்சி தரும் தன்மையைக் கொண்டுள்ளது
சங்குப்பூ
இது சருமத்தை மென்மையாக வைக்கவும், கறைகள், பருக்கள் போன்றவற்றை நீக்கி முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது