சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆளிவிதை ஜெல் உதவுகிறது. இதில் சருமம், முடி ஆரோக்கியத்திற்கு ஆளிவிதை ஜெல் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்
ஆளிவிதை ஜெல்
ஆளி விதைகள் உடல் நலத்தைக் காப்பது மட்டுமல்லாமல், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்ககும் பெரிதும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி, ஈ, மக்னீசியம், இரும்பு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இவை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது
முடி வளர்ச்சிக்கு
ஆளி விதை ஜெல்லை முடிக்குப் பயன்படுத்துவது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடியை வேகமாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. சிறந்த முடிவுகளைப் பெற ஆளிவிதை ஜெல்லை ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்
சுருள் முடிக்கு
ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது முடிக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, சுருள் முடியை நிர்வகிக்க உதவுகிறது. இது இயற்கையாகவே சுருள் முடிக்கு மிகுந்த நன்மை பயக்கும்
உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க
ஆளிவிதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இதை உச்சந்தலையில் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க
ஆளிவிதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைத்து முடி உதிர்தல், முதுமை அடைவது, முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது
நீரேற்றத்தை அதிகரிக்க
ஆளிவிதை ஜெல்லில் பாலி-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் உள்ளது. இவை தோல் தடுப்பு செயல்பாட்டை மேம்படுத்தவும், சருமத்தின் நீரேற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனினும் சருமம் உணர்திறன் மிக்கதாக என்பதால், ஜெல்லைப் பயன்படுத்தும் முன் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது
நெகிழ்ச்சியான சருமத்திற்கு
சருமத்திற்கு ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்துவது ஆன்டி-ஏஜிங் ஜெல்லாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை உலர்வது, தளர்த்துவதைத் தடுக்கிறது
முகப்பருவை நீக்க
ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜனை சமன் செய்து முகப்பரு வெடிப்பைக் குறைக்கிறது. இந்த ஜெல்லில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம், எண்ணெய் சருமம் மற்றும் சரும உற்பத்தியை நிர்வகிக்கிறது