உடற்பயிற்சிக்கு பிறகு தலைவலி ஏற்பட காரணம் என்ன?

By Karthick M
29 Jul 2024, 17:55 IST

உடற்பயிற்சிக்கு பிறகு தலைவலி

பலருக்கு உடற்பயிற்சிக்கு பிறகு தலைவலி ஏற்படும். இந்த பிரச்சனைக்கான காரணம் தெரியாமல் பலர் அவதிப்படுவார்கள். இதற்கான தீர்வை பார்க்கலாம்.

வெயிலில் உடற்பயிற்சி

வெயிலில் பயிற்சி செய்வது தலைவலியை ஏற்படுத்தும். காரணம் இந்த நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும், இதனால் மூளை மோசமாக பாதிக்கப்படும்.

நீரிழப்பு பிரச்சனை

வெயில் நேரத்தில் உடற்பயிற்சி தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். வெயிலில் அதிக வியர்வை ஏற்பட்டு உடலில் தண்ணீரை வெளியேற்றும். நீரிழப்பு காரணமாகவும் தலைவலி ஏற்படலாம்.

கழுத்து மற்றும் தலை தசை

அதிக உடற்பயிற்சி செய்யும் போது கழுத்து மற்றும் தலை தசைகளுக்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது. இதனால் இரத்த நாளங்கள் நீண்டு தலைவலி ஏற்படலாம்.

கவனிக்க வேண்டிய ஒன்று

நீரிழிவு நோயாளியாக இருந்தால் உங்கள் உடலின் இரத்த குளுக்கோஸ் அளவை சரிபார்க்கவும். இதனால் தலைவலி ஏற்படலாம். அதேபோல் தூக்கமின்மை காரணமாகவும் தலைவலி வரலாம்.