சுகர் டக்குனு குறைய இந்த மூலிகை எடுத்துக்கோங்க

By Gowthami Subramani
29 May 2024, 09:00 IST

நீரிழிவு நோய்

இது ஒரு நாள்பட்ட நோயாகும். இது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத போதோ, உடல் திறம்பட இன்சுலினை பயன்படுத்த முடியாத போதோ ஏற்படுகிறது. இதில் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் மூலிகைகள் சிலவற்றைக் காணலாம்

வெந்தயம்

வெந்தயம் கரையக்கூடிய நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது

இலவங்கப்பட்டை

இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

பாகற்காய்

இது அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை நேர்மறையாக பாதிக்கிறது. அதாவது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் கலவைகளைக் கொண்டுள்ளது. இதை காய்கறி அல்லது சாறு வடிவில் உட்கொள்ளலாம்

ஜின்ஸெங்

ஜின்ஸெங் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சிறந்த மூலிகையாகும். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரோஸ்மேரி

ரோஸ்மேரி உடல் எடையிழப்பை ஊக்குவிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவையும் சமன் செய்கிறது. மேலும், உடலில் கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது

கற்றாழை

நீரிழிவு போன்ற பல நாள்பட்ட வாழ்க்கை முறை நோய்களுக்கு உடலில் ஏற்படும் அழற்சியே முக்கிய காரணமாக அமைகிறது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து அஜீரணத்தை குணப்படுத்துகிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது

இஞ்சி

இஞ்சி உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சிறந்த மூலிகையாகக் கருதப்படுகிறது