நீரிழிவு நோயாளிகள் கால் புண் மட்டும் வரவே விட்ராதீங்க

By Gowthami Subramani
21 May 2024, 13:30 IST

நீரிழிவு நோய் என்பது ஒரு நபரின் உடலில் ஏற்படும் இரத்த சர்க்கரை அளவு அல்லது இன்சுலின் என்ற ஹார்மோனைப் பயன்படுத்துவது பாதிப்பைக் குறிக்கிறது. இந்த நீடித்த உயர் சர்க்கரை அளவு உடல் முழுவதும் நரம்புகள் இரத்த நாளங்களை சேதப்படுத்தலாம்

நீரிழிவு நோய் புண்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புண்கள் மெதுவாகக் குணமாகும். எனவே நீரிழிவு நோயில் காயங்களை உருவாக்கும் சாத்தியமான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க சில வழிமுறைகளைக் கையாளலாம்

தொற்று அபாயம் அதிகரிப்பு

நீரிழிவு நோய் போதுமான அளவு நிர்வகிக்கப்படாத போது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. இது புண் சிகிச்சையை சிக்கலாக்கி, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்

குளுக்கோஸ் மேலாண்மை

நீரிழிவு நோயில் ஏற்படும் கால் புண்களைத் தவிர்க்க பயனுள்ள குளுக்கோஸ் மேலாண்மை முறைகளையும், நிலையான பாத பராமரிப்பும் தேவைப்படுகிறது

சுத்தமாக வைத்திருத்தல்

நல்ல கால் சுகாதாரத்தைப் பராமரிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் கால்களை லேசான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்

காலுறைகளைத் தேர்ந்தெடுப்பது

நீரிழிவு நோயாளிகள், நன்கு வசதியான மற்றும் பொருந்தக்கூடிய பாதணிகள் மற்றும் மென்மையான காலுறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

வழக்கமான சோதனை

தோல் பிளவுகள், தடித்தல் அல்லது அசௌகரியம் போன்ற அறிகுறிகளை முன்னதாகவே தெரிந்து கொள்வதற்கு கால்களின் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளலாம்