உங்க குழந்தை ஓவரா செல்போன் பாக்குதா? - இத செய்யுங்க!
By Kanimozhi Pannerselvam
13 Jan 2024, 14:35 IST
வரம்புகளை உருவாக்குங்கள்
செல்போன் அடிக்ஷனில் இருந்து உங்கள் குழந்தையை வெளியே கொண்டு வர சில வரம்புகளை அமையுங்கள். செல்போனை எங்கு, எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்ற நேரக்கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். உதாரணமாக சாப்பிடும் போது, படிக்கும் நேரம், உறங்க செல்லும் முன்பு செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கலாம்.
ஆக்டிவிட்டி
குழந்தைகளை வீட்டிற்குள் பூட்டிவைக்க செல்போனை சாவியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, வேறு நல்ல ஆக்டீவான பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள். வீட்டிற்கு வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவது, புத்தக வாசிப்பு, செஸ் போன்ற இன்டோர் விளையாட்டுக்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கலாம்.
குழந்தைகள் தங்களது பெற்றோர்களை பார்த்து தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். எனவே செல்போனை பயன்படுத்துவதில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்க வேண்டும். குழந்தைகள் முன்பு தேவையில்லாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
டெக் ஃப்ரீ சோன்
வீட்டில் படுக்கையறை, டைனிங் டேபிள், ஸ்டேடீ ரூம் போன்ற இடங்களை டெக் ஃப்ரீ சோனாக மாற்றலாம். இங்கு குழந்தைகள் செல்போன், லேப்டாப், டேப் போன்ற கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கலாம்.
தொழில்நுட்ப உதவி
குழந்தைகள் செல்போனில் ஆன்லைன் மூலமாகவே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஆப்ஸ் அல்லது இணையதளங்களை கட்டுப்படுத்தும் வசதிகளை பயன்படுத்தலாம்.
குழந்தையுடன் பேசுங்கள்
குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்க, பெற்றோர்கள் அவர்களுடன் குவாலிட்டி டைமை செலவிட வேண்டும். அதாவது வெளியே அழைத்துச் செல்வது, தோட்டம் அல்லது சமையலறையில் ஒன்றாக வேலை பார்ப்பது, கதை சொல்வது, அன்றைய தினம் நடந்த விஷயங்கள் குறித்து கேட்டறிவது என குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகரிக்கலாம்.