கேன்சர் நோயாளிகள் ஏன் காளான் சாப்பிட வேண்டும் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
04 Mar 2024, 13:30 IST

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

காளானில் பீட்டா குளுக்கன்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. புற்றுநோய் நோயாளிகள் கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. காளானை உணவில் சேர்த்துக் கொள்வதால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

காளானில் செலினியம், வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உருவாக்கும் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

புற்றுநோய் நோயாளிகள் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். ரீஷி மற்றும் கார்டிசெப்ஸ் போன்ற காளான்கள் இதைக் குறைக்க உதவுகின்றன.

புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது

ஆஞ்சியோஜெனீசிஸ் என்பது புதிய இரத்த நாளங்களை உருவாக்கும் செயல்முறையாகும். புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரவலில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஷிடேக் மற்றும் மைடேக் போன்ற காளான்களுக்கு ஆஞ்சியோஜெனீசிஸைத் தடுக்கும் திறன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக சத்துக்கள்

காளானில் அதிக சத்துக்கள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. காளானில் வைட்டமின் பி மற்றும் டி, செலினியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் உள்ளன. புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் பக்கவிளைவாக ஊட்டச்சத்து குறைபாடு அல்லது பசியை காளான் சரிசெய்யும்.

செரிமானம்

ஷிடேக் மற்றும் மைடேக் போன்ற காளான்களில் அதிக நார்ச்சத்து மற்றும் ப்ரீபயாடிக் உள்ளது. இது செரிமான மண்டலத்தில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.