சிறந்த செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. இதில் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும் மூலிகை டீ வகைகளைக் காணலாம்
பெப்பர்மின்ட் டீ
இந்த தேநீரானது வீக்கத்தைக் குறைக்கவும், செரிமான அசௌகரியத்தை போக்கவும் உதவுகிறது. இதன் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் வாயு மற்றும் அஜீரணத்தை எளிதாக்குகிறது
மஞ்சள் டீ
இது அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். மஞ்சள் டீ எடுத்துக் கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது
பெருஞ்சீரக டீ
பெருஞ்சீரக டீ உட்கொள்வது வாயுவை விடுவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை செரிமான மண்டலத்தின் தசைகளைத் தளர்த்தி, சிறந்த குடலியக்கத்தை மேம்படுத்துகிறது
அதிமதுர வேர் டீ
பொதுவாக அதிமதுர வேரானது செரிமான அமைப்பை மேம்படுத்தவும், குடல் புறணியை ஆற்றவும் உதவுகிறது. இவை வீக்கத்தைக் குறைப்ப்தன் மூலம் சிறந்த செரிமானத்தை ஆதரிக்கிறது
கெமோமில் டீ
இது அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இது வயிற்று அசௌகரியத்தைத் தணிக்கவும் அமில ரிஃப்ளக்ஸைக் குறைக்கவும் உதவுகிறது
இஞ்சி டீ
இவை செரிமானத்தைத் தூண்டுகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் குமட்டலைத் தடுக்க உதவுகிறது. இவை அஜீரணத்தைப் போக்கி குடலை ஆரோக்கியமாக வைக்கிறது