யூரிக் அமில அளவை இயற்கையாகவே குறைக்கும் சிறந்த மூலிகை இலைகள் இங்கே

By Gowthami Subramani
14 Apr 2025, 18:27 IST

அதிக யூரிக் அமில அளவைக் கையாள்வது வேதனையான ஒன்றாகும். ஏனெனில், உடலில் யூரிக் அளவு அதிகமாவதால் மூட்டு விறைப்பு, வீக்கம் அல்லது கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் எழுகிறது. இந்த அதிக யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தில் சில சக்திவாய்ந்த மூலிகைகள் மற்றும் இலைகள் உதவுகின்றன

வேப்ப இலைகள்

இந்த இலைகளின் கசப்பான பண்புகள் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் இரத்த சுத்திகரிப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கின்றன. இவை யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

வில்வ இலைகள்

ஆயுர்வேதத்தில் உடலிலிருந்து நச்சுக்களை நீக்க வில்வ இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இவை செரிமானத்தை ஆதரிக்கவும், அதிகப்படியான யூரிக் அமிலம் உட்பட நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது

கறிவேப்பிலை

கறிவேப்பிலைகள் சிறந்த செரிமானம் மற்றும் நச்சு நீக்கத்திற்கு உதவுகின்றன. இவை சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும், இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன

புதினா இலைகள்

உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், நீரேற்றத்தையும், நல்ல செரிமானம் மற்றும் நச்சுக்களை நீக்கவும் புதினா இலைகள் சிறந்த தேர்வாகும். இவை அதிகப்படியான யூரிக் அமிலத்தை அகற்றுவதை ஊக்குவிக்கிறது

கிலோய் இலைகள்

ஆயுர்வேதத்தில் கிலோய் ஆனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் வீக்கம் மற்றும் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது

துளசி

இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நச்சு நீக்கும் விளைவுகளுக்கு பெயர் பெற்றதாகும். இது உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கவும், யூரிக் அமிலம் குவிவதைக் குறைக்கவும் உதவுகிறது

குறிப்பு

சிறந்த நன்மைகளைப் பெற இந்த இலைகளை புதிதாக மெல்லலாம், மூலிகை தேநீரில் காய்ச்சி குடிக்கலாம். எந்தவொரு புதிய மூலிகையையும் தொடங்கும் முன்பாக குறிப்பாக மருந்து எடுத்துக்கொண்டால், எப்போதும் ஆயுர்வேத நிபுணர் அல்லது மருத்துவரை அணுகலாம்