முதுமைக் காலத்தில் வரக்கூடிய அல்சைமர் எனும் ஞாபக மறதி பிரச்சனை மீளமுடியாத ஒன்றாகும். ஆனால், இதனைக் கட்டுப்படுத்த ஆயுர்வேத மூலிகைகள் சில உதவுகின்றன
அஸ்வகந்தா
மூளை ப்ளேக்குகளை உருவாக்கும் பீட்டா அமிலாய்டு உருவாவதை அஸ்வகந்தா தடுக்க உதவுகிறது. மேலும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மூளைக்கு பயனளிக்கிறது
வல்லாரை
ஆயுர்வேதத்தில் மனத்தெளிவை அதிகரிக்க வல்லாரை பெரிதும் உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மூளைக்கு உதவுகிறது
ஜின்செங்க்
இது மூளை நினைவாற்றலை அதிகரிக்க உதவும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். ஜின்செங்கை எடுத்துக் கொள்வதன் மூலம் வயது சார்ந்த நினைவாற்றல் குறைவதைத் தடுக்கலாம்
அதிமதுரம்
இது வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைக்கு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகும். இது வயிறு, மனநலக் கோளாறுகள், மூட்டு வலிக்குத் தீர்வு தருவதாக அமைகிறது
மஞ்சள்
இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவுப்பொருளாகும். ஆயுர்வேதத்தில் நீண்டகாலமாக சிறந்து விளங்கிய மருத்துவ பொருள் என்றும் கூறலாம். இதில் உள்ள குர்குமின் கலவையான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அல்சைமர் நோயைத் தடுக்க உதவுகிறது